தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!

699

குற்றப்பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே ஒருவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக வேதனை தெரிவித்த உச்சநீதிமன்றம், குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. மேலும், நாடாளுமன்றம் மட்டுமே சட்டதிருத்தம் கொண்டுவந்து வழிவகை காணலாம் எனவும் அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், குற்றப்பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.