இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

316

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே. ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் அண்மைக்காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மோட்டார் வாகன சட்டத்தின்படி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், சாலை விபத்துக்கள் அதிகரிப்பதால், பைக்கில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் அணியவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அக்டோபர் 23ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.