பொறியியல் படிப்புகளில் சேர 3ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்..!

220

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 3ம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வு முறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவினருக்கு நேரிடையாக கலந்தாய்வு நடைபெற்றது. பொதுபிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் 3ம் கட்ட கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்கியது. 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற 18 ஆயிரத்து 513 பேரில் 12,206 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில்,மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்,42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.