கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடந்தையாக உள்ளது – சீமான்!

2132

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடந்தையாக உள்ளது என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
மாமன்னன் ராஜராஜசோழனுக்கு ஆயிரத்து 32வது சதயவிழவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்திளார்களிடம் பேசிய அவர், ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களின் முகவர்கள் அதிகாரத்தில் இருப்பதாக கூறினார். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடந்தையாக உள்ளது என தெரிவித்த சீமான், பெரிய முதலாளிகளுக்கு தரகு வேலை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ் இனம் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால், ராஜராஜ சோழன் குறித்து பலருக்கு தெரியவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டினார்.