கர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது.

328

கர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மைசூர், பெங்களூரு வழியாக தேயிலைத் தூள் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆறு நாட்களாக கர்நாடகாவில் பதற்ற நிலை நீடித்து வருவதால், தேயிலைத்தூளை ஏற்றி செல்ல லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலைத்தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது. இதனால், தேயிலை தொழில் சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.