பாழடைந்த வீட்டில் 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

353

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக, தனி பிரிவு அமைக்கப்பட்டு அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பாழடைந்த வீடு ஒன்றில் 4 டன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பறிமுதல் செய்த அரிசியை உடையார்விளையில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.