கருப்பு பணம் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னோசியா ஆசிஸ் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்கள், கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருப்பு பணம் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக தானியங்கி தகவல் பரிவர்த்தனையை செயல்படுத்த இரு தரப்பினரிடையே ஒப்புதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களையும், கருப்பு பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களையும் அறிய முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.