காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு – ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டம்.

600

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச். டி. குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2 மஜத எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி, பாஜக-வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே, பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. 78 எம்எல்ஏ-க்களில் 66 பேர் மட்டும் கலந்துக்கொண்டதால், மீதி 12 எம்எல்ஏ-க்கள் நிலை குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், இதில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக 100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என தங்கள் எம்எல்ஏ-க்களுக்கு ஆசை வார்த்தை காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.