ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய, மாநில அரசுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

105

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய, மாநில அரசுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு விரைந்து நிவாரணத்தொகையை வழங்கவேண்டும் என்றார். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது கண்டித்தக்கது என்று கூறிய திருநாவுக்கரசர், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மாற்றவேண்டும் என அமைச்சர்கள் பேசிவருவது தேவையற்றது என்று கூறினார்.