காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது நல்ல நாட்கள் திரும்ப வரும் | வரலாற்றில் மோசமான நடவடிக்கை பணமதிப்பு நீக்கம் !

92

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நல்ல நாட்கள் திரும்பி வரும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில்ப பங்கேற்று பேசிய அவர், எப்போது நல்ல நாட்கள் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து இருப்பதாக கூறினார். 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது நல்ல நாட்கள் திரும்ப வரும் என்று குறிப்பிட்ட ராகுல், இந்திய வரலாற்றில் எடுக்கப்பட்ட மோசமான முடிவு பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்று விமர்சித்தார். மோடியின் தனிப்பட்ட விருப்பத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பாரதிய ஜனதா பலவீனப்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை இரண்டு வருடத்தில் மோடி செய்து விட்டதாக ராகுல் சாடினார்.