மோடியின் பேச்சு, செயல் அவரின் மன அழுத்தத்தை காட்டுகிறது – காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி

192

நரேந்திர மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் அவரிடையே மன அழுத்தத்தை உண்டாக்கியுள்ளதை காட்டுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் இதில் பேசிய சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுலுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம் அளித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் சமீப காலமாக நரேந்திர மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் அவரிடையே மன அழுத்தத்தை உண்டாக்கியுள்ளதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.