காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும்- ராகுல் காந்தி !

372

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி, விவசாயிகளை மறுந்து விடுவதாக குற்றச்சாட்டினார்.
வேலையில்லா திண்டாட்டத்தால் ஏராளமானோர் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக கூறிப்பிட்ட ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.