காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்..

614

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதி என டெல்லி காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சோனியா காந்தி, கபில்சிபல், சசிதரூர், ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங், ராகுல் காந்தியை கட்சியின் டார்லிங் எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

வகுப்புவாத மற்றும் சர்வாதிகார எண்ணம் கொண்ட சக்திகள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த வேளையில் ராகுல் காந்தி நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், கிருஷ்ணசாமி, செல்லக்குமார், வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சால்வை அணித்து வாழ்த்து தெரிவித்தனர்.