காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் : ஒருவொருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு

366

சென்னை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் முன்னிலையில் கட்சியினர் ஒருவொருக்கொருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் . மாவட்ட தலைவர்களுடனும்,மூத்த நிர்வாகிகளுடனும் கட்சியின் வளர்ச்சி, குறித்தும், குறைகளையும் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் குமரிஅனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் காங்கிரஸ் கொரடா விஜயதரணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சியினர் திடீரென அடிதடியில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும்,ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.