காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்!

250

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்
19 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், ராகுல் காந்தியை தலைவராக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி இம்மாதம் 16ம் தேதி தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தியை தவிர, வேறு யாரும் இதுவரை போட்டியிடவில்லை. . இறுதிவரை ராகுலை தவிர யாரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.