சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது..!

207

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, மாட்டிறைச்சி தடை, ஹஜ் பயணிகளுக்கு மானியம் ரத்து உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம், இஸ்லாமியர்களை மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.