எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..!

298

பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றிற்கு 83 ரூபாய் 13 காசுகளுக்கும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 76 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 10-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.