டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடக்கம்..!

146

டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. குலாம் நபி ஆசாத், மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி, பழைய காரிய கமிட்டியை கலைத்து புதிய காரிய கமிட்டியை நிறுவினார். இதன் பின் கடந்த 22ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுக்க ராகுல்காந்திக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரபேல் விமான ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்க்கப்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் தேசிய குடி மக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேர் நீக்கப்பட்டது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.