காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டம்…

105

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் கடந்த 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

மேலும், 17-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.