மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் | காங்கிரஸ் தொண்டர்கள் திரையரங்கில் புகுந்து ரகளை

82

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தா திரையரங்கில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

திரைப்பட இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கிய the Accidental Primeminister என்ற திரைப்படம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக கருத்து பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரைகளை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.