காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

81

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே தரப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோர்த்துள்ளன.
இந்த இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸூக்கு கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து இன்று அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.