செல்பிக்கு அடிமையான கொரில்லாக்கள்..!

105

காங்கோ நாட்டில் மனிதர்களை போலவே செல்பிக்கு போஸ் கொடுக்கும் 2 கொரில்லாக்கள், விதவிதமான முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

காங்கோ நாட்டின் விருங்கா உயிரியல் பூங்காவில் கொரில்லா வகை குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, கொரில்லாக்களுடன் விதவிதமாக செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், அங்குள்ள நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் செல்பிக்கு அடிமையாக்கி விட்டன. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே, அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கின்றன. அப்போது, மனிதர்களை போலவே விதவிதமான முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.