ஏ.கே.போஸ் மறைவு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

295

சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கட்சியின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர் ஏ.கே.போஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். ஏ.கே.போஸை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளனர். இதே போல் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிததுள்ளார்.

ஏ.கே.போஸ் மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.