சென்னை அருகே தாயை கொலை செய்த கம்யூட்டர் என்ஜீனியர்!

1210

சென்னை அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்த கொலை செய்த வாலிபர், தனது தாயையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் தஷ்வந்த் கம்யூட்டர் என்ஜீனியரான அவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தஷ்வந்திற்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் பணத்தகராறு காரணமாக அவரது தாய் சரளாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரது தாயையும் கொலை செய்துவிட்டு நகை, பணத்துடன் தப்பி ஒட்டி தலைமறைவானார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சரளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தஷ்வந்தை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஷ்வந்த், போரூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஜாமீனில் வெளிவந்தார். சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களிலேயே தனது தாயையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.