வெங்கையா நாயுடு

பள்ளிகளில் விளையாட்டை கட்டாய பாடமாக்கி அதற்கென தனியாக மதிப்பெண் வழங்க வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்…

புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் பல்நோக்கு விளையாட்டு அரங்கை திறந்து வைத்து பேசிய அவர், இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமானோர் இருந்தும் ஒலிம்பிக்கில் சொற்ப பதக்கங்களையே வென்று திருப்தி அடைவதாக வேதனையுடன் கூறினார். ஒரு சிறந்த விளையாட்டு வீரர் ஒருவர் தலைவராகும் வாய்ப்பும் இருப்பதாக சுட்டிக் காட்டிய வெங்கையா நாயுடு, பள்ளிகளில் விளையாட்டை கட்டாயப் பாடமாக்கி அதற்கென தனியாக மதிப்பெண் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.