செந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…

186

வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறாக வாக்களிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கட்டாய படுத்தி வருவதாக, அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்ப்பட்ட அரவங்குரிச்சி, வேளாயுதம்பாளையம் ஆகிய வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தடுப்பதாக அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அரவக்குறிச்சி பகுதியில் வாகனத்தின் மூலமாக வாக்காளர்களை கொண்டுவந்து வாக்களிக்க திமுக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறாக வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வரும் செந்தில் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.