சென்னையில் உள்ள வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து…சென்னை காவல்துறை எச்சரிக்கை …!

398

சென்னையில் உள்ள வணிக வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களில் இன்னும் 15 நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் அவற்றின் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னையில் நகர, பெருநகர சட்டவிதி 2012-ன் படி சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாகிறது என்றும் அப்படி பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.