மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் தமிழக அரசு – தா.பாண்டியன்

78

தமிழக அரசு சுயமரியாதையை விட்டுவிட்டு மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் வேதனை தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் வணிகப்போர் நடத்தி வரும் அமெரிக்காவால் கச்சா எண்ணெய் அதிக விலைக்கு வாங்கப்படுவதால், பெட்ரோல், டீசல் விலை ஏறுவதாகத் தெரிவித்தார். தமிழக அரசு விவசாயிகளுடன் போர் நடத்தி வருவதாகக் கூறிய தா. பாண்டியன், விளைநிலங்களில் விவசாயிகள் ஒப்புதலின்றி, உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். இதனை எதிர்த்து மதசார்பற்ற அணிகள் போராட வேண்டும் எனவும், அதற்கு இடதுசாரிகள் துணைநிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.