ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் போராட்டத்தின்போது, வன்முறை நடைபெற்ற பகுதிகளில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

212

சென்னையில், ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் போராட்டத்தின்போது, வன்முறை நடைபெற்ற பகுதிகளில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி, சென்னையில் ஐஸ் ஹவுஸ், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரா்களை காவல்துறையினர் கலைக்க முயன்றபோது, பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், வன்முறைக்குள்ளான நடுக்குப்பம் பகுதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிப்பட்டட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.