மூன்று தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

164

மூன்று தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, இடைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.