காமன் வெல்த் போட்டி : பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமாருக்கு தங்க பதக்கம் ..!

860

காமன் வெல்த் ஹாக்கி போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவ லிங்கம் தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இன்று 77 கிலோ எடை பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற தமிழக வீரர் சதீஷ் குமார் சிவ லிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். வேலூரை அடுத்த சத்துவாச்சாரி கிராமத்தை சேர்ந்த சதீஷ் குமார் சிவ லிங்கம், 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர் சதீஷ் குமாரின் சாதனையால் அவரது பெற்றோரும் கிராமத்தினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியா 3 தங்க பதக்கங்கள், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.