காமென்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஊக்கத்தொகை அறிவித்தார்..!

334

காமென்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் கடிதத்தில்,காமன்வெல்த் ஸ்குவாஷ் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேசைப்பந்து ஆடவர் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சத்தியனுக்கும்,மற்றொரு வீரர் சரத் கமல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதேபோன்று, ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு 30 லட்சம் ரூபாயும்,ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.