குற்றத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது – காவல் ஆணையர் தேவ ஆசீர்வாதம்

238

மதுரையில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக காவல் ஆணையர் தேவ ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநகர காவல்துறைக்கு உட்பட்ட வார்டுகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து இருப்பதாக கூறினார். அதிகாரிகள் வாரத்திற்கு இரண்டு முறை பொதுமக்களை நேரில் சந்திப்பார்கள் என கூறிய காவல் ஆணையர் தேவ ஆசீர்வாதம், இதன் மூலம் பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே நட்புணர்வு ஏற்படும் என தெரிவித்தார். மதுரையில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.