கொள்ளையர்களை மடக்கி பிடித்த காவலர்களுக்கு ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டு ..

266

சென்னையில், துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மதன் பகதூர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழங்கம்போல் இரவு பணியை முடித்து விட்டு, வானகரம் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மதன் பகதூரை மிரட்டி செல்போன் பறித்து சென்றனர். அவர் கூச்சலிட்டதால், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து காவலர்கள் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சீனிவாசன், சதீஸ்குமார் என்பது தெரியவந்தது. இந்தநிலையில், கொள்ளையர்களை துரிதமாக செயல்பட்டு மடக்கி பிடித்த காவலர் எழிலசரன், காவல் நண்பன் ஞானசம்பந்தன் ஆகியோரை நேரில் அழைத்து, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநான் பாராட்டி பரிசு வழங்கினார்.