ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க சந்திரகேசரராவ் முடிவு..!

254

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பரில் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடத்த டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.

தெலுங்கானாவில், ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி முடிவடைய 9 மாதங்கள் இருப்பதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டி சந்திரகேசரராவ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு, சட்டசபையை கலைக்க வேண்டும் என்ற அமைச்சரவையின் ஒப்புதல் கடிதத்தை ஆளுனரை சந்தித்து அவர் வழங்கினார். இந்தநிலையில், தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோனை நடத்துகிறது.

வரும் டிசம்பரில் மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த மாநிலங்களுடன் சேர்த்து 119 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவுக்கும் வரும் அக்டோபர் மற்றும் நவம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.