ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் : அக்டோபர் 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு

376

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆய்வு நடத்துவதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அடுத்த மாதம் 24ம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் கடந்த வருடம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த ஆணையத்தின் பணிக்காலம் கடந்த வருடம் டிசம்பர் மாதமும், கடந்த ஜூன் மாதமும் என இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலைய்ல், தற்போது மீண்டும் கால நீட்டிப்பு எதையும் ஆறுமுக சாமி ஆணையம் கோரவில்லை.

இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் ஆறுமுக சாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.