காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். .

காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக அறிவித்தார். இதன்படி அமர்நாத் யார்த்திரையும் தொடங்க உள்ள நிலையில, என்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினருடன் கமாண்டோ படை வீரர்களும் இணைந்து தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே சிரிகுப்ரா வனப்பகுதியில் தீவராவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர்,பதுங்கியிருக்கும் 3 தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.