மன்னர் மடுத்திருத்தல் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.

355

மன்னர் மடுத்திருத்தல் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.
கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்டினால் மல்கம் றஞ்சித் ஆண்டகைத் தலைமையில் மன்னர் மடுத்திருத்தல் ஆவணித் திருவிழா கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பலியைத் தொடர்ந்து திருச்சொரூப பவனி நடைபெற்ற பிறகு, திருச்சொரூப ஆசிர்வாதமும் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திருப்பலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.