கொழும்பு டெஸ்டின் 2 வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

415

கொழும்பு டெஸ்டின் 2 வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 வது டெஸ்ட் போட்டியில் கொழும்புவில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஹானே, புஜாரா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தில் 344 ரன்கள் எடுத்திருந்தது. இருவரும் சதம் கடந்து களத்தில் இருந்தனர்.
இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த புஜார 133 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின், ரஹானே உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சற்று நேரத்திற்கு முன்பு வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்துள்ளது.