ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்பு புறக்கணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

83

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்கள் மூலம் போராட்டக்காரர்கள் தமிழகம் முழவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்துவார்கள் எனத் தெரிகிறது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களம் இறங்குவதை அடுத்து, போராட்டம் தீவிரமாகும் என்பதால் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.