மக்கள் குறைகளைத் தெரிவிக்க முகநூல் பக்கம் தொடங்கப்படும் – ஆட்சியர் வீரராகவராவ்

396

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைகளைத் தெரிவிக்க விரைவில் முகநூல் பக்கம் தொடங்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீரராகவராவ் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், ஆட்சியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நலனில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் 24 மணி நேரமும் தன்னைத் தொடர்புக் கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்று கூறினார்.