காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை..!

318

ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாயில்களும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றார். அமிலங்களை அகற்றுவதற்காக இருந்த ஒப்பந்த பணியாளர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறிய சந்தீப் நந்தூரி, ஆலையின் அனைத்து வாயில்களும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேசமயம் நிர்வாக ரீதியாக ஆலை இயங்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியின்படி இதுவரை ஸ்டெர்லைட் தரப்பிலிருந்து யாரும் மாவட்ட நிர்வாகத்தை அனுகவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.