மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

322

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி, அணைகள் நிரம்பியுள்ளன. இந்தநிலையில், அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 16 ஆயிரத்து 969 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116 புள்ளி 85 அடியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.