வடகொரிய அணு ஆயுத சோதனை கூடத்தில் விபத்து | சுமார் 200 பேர் பலியாகியிருப்பதாக ஜப்பான் தொலைக்காட்சி தகவல்..!

356

வட கொரிய அணு ஆயுத சோதனை கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக ஜப்பான் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் வட கொரியா மேற்கொண்ட ஹைட்ரஜன் வெடிக்குண்டு சோதனை அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், வட கொரிய அணு ஆயுத சோதனை கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக ஜப்பான் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர் சோதனைகளால் அணு ஆயுத கூடம் பலவீனம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜப்பான் தொலைக்காட்சி, வட கொரியா தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.