தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கூட்டுறவுத்துறையில் நஷ்டம் – அமைச்சர் செல்லூர் ராஜு

113

தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன என்றும், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 3 மடங்கு லாபத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆற்காடு சாலையில் புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு சிறப்பாக நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், 2-வது பசுமை புரட்சி அடிப்படையில் கூட்டுறவுத்துறை 3 மடங்கு லாப விகிதத்தில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.