மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை திரும்ப பெற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் பிரதமர் மோடியிடம் முதல்வர் கடிதம்..!

325

மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை திரும்ப பெற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது வாடிக்கையாகியுள்ளதாக கூறியுள்ளார். எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்ற உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால் தமிழக மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். எனவே, மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, இலங்கை சிறையில் உள்ள அடைக்கப்பட்டுள்ள 108 தமிழக மீனவர்களையும், அவர்களின் 165 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.