சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

263

முன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் மக்களவை தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக கூறியுள்ளார். இந்தியாவிலேயே நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர் சோம்நாத் சாட்டர்ஜி எனக்குறிப்பிட்டுள்ள முதல்வர், சோம்நாத் சாட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.