சென்னை பல்கலைக்கழக வைர விழா நிறைவு நிகழ்ச்சி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

248

உயர்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 160 ஆம் ஆண்டு வைர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 12 பேராசிரியர்களுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருதும், 13 பேராசிரியர்களுக்கு சிறந்த நிர்வாக அலுவலகர்கள் விருதும் வழங்கப்பட்டது. மேலும் 4 மாணவர்கள் நாட்டுநலப்பணித்திட்ட விருதினையும், 5 மாணவர்களுக்கு விளையாட்டு விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பழனிசாமி, கல்வித்துறையில் மாணவர்களின் நலன்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் மனித முன்னேற்றத்திற்கு சக்தி வாய்ந்த கருவியாக கல்வி திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் படிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.