தாய் சேய் உயிரிழப்பு குறைவு – முதல்வர் பழனிசாமி

182

தமிழகத்தில் பிரவசத்தின் போது, தாய் சேய் உயிரிழப்பு குறைந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியில் 98 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்தார். அதிமுக அரசின் கீழ் மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள அணைகளுக்கு வரும் உபரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.