பேரிடர் மீட்பு பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..!

820

பேரிடர் மீட்பு பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை அருகே பேரிடர் மேலாண்மை பயிற்சியின் பொது 2வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த செய்தி அறிந்து துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துள்ள அவர், 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உரிய அனுமதி பெறாமல் மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.